காஷ்மீர் விவகாரம் ஐ.நா வில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் இந்தியாவிற்கு வெற்றி

347 Views

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்திமத்திய அரசு இரத்து செய்ததை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்தது. காஷ்மீர் சர்வதேச அளவில் பிரச்சனைக்குறிய இடம் என்றும் இந்திய அரசு அதற்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்தது சர்வதேச சட்டத்துக்கு புறம்பானது என தெரிவித்தது.

இதையடுத்து, இந்தியா காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்ததை எதிர்த்து பாகிஸ்தான் ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியது. மேலும்,  இது தொடர்பாக ஆலோசிக்கப்படவேண்டும் என கோரிக்கை வைத்தது.

இந்நிலையில், காஷ்மீர் தொடர்பான விவாதத்தை மேற்கொள்வது குறித்து ஐ.நா. சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் காஷ்மீர் குறித்து விவாதம் வேண்டும் என பாகிஸ் தானுக்கு ஆதரவாக சீனா வாக்களித்தது. ஆனால், ரஷியா போன்ற நாடுகள் காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம் எனவும் இதை ஐ.நா. சபையில் விவாதிக்க அவசியமில்லை என வாக்களித்தது.

இறுதியில், இந்தியாவுக்கு அதிகமான நாடுகள் ஆதரவு அளித்தால் ஐ.நா. சபையில் காஷ்மீர் விவாதத்தை எழுப்ப முயற்சித்த பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஐ.நா.வுக்கான இந்திய பிரநிதி சையது அக்பருதீன் கூறியதாவது:

 காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அங்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அதிகாரத்தை இந்திய அரசு ரத்து செய்தது முற்றிலும் இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டது. மேலும், அது முற்றிலும் இந்தியாவின் உள்விவகாரம். ஆகையால் பிற நாடுகள் இந்த விவகாரத்தில் தலையீட எந்தவித உரிமையும் கிடையாது.

மேலும், காஷ்மீரில் வாழும் மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்காகவும், சமூக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காவே சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கு அமைதியை நிலைநாட்டு வதற்கான அத்தனை முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும். என்றும் அவர் தெருவித்தார்

 

Leave a Reply