காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்

இலங்கை காவல்துறை பாதுகாப்பின் கீழ்  இருந்த இருவர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, குறித்த சம்பவம் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதென்றும், இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

பாதாள உலகக்குழுவைச் சேர்ந்த  “உரு ஜுவா“ என்றழைக்கப்படும் மெலோன் மாபுல மற்றும் “கொஸ்கொட தாரக என்றழைக்கப்படும் தாரக பெரேரா விஜேசேகர ஆகியோர் அண்மையில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.