186 Views
பிரேஸிலின் ‘கறுப்பு முத்து’ என வர்ணிக்கப்படும் முன்னாள் கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலே தனது 82 ஆவது வயதில் நேற்று (29) காலமானார்.
கால்பந்து உலகம் கண்ட மிகச் சிறந்த வீரர்களுள் முதன்மையானவர் என்று பெலே கருதப்படுகிறார்.
1950-களின் இறுதியில் தொடங்கி 21-ஆண்டுகள் கால்பந்து ஆடிய பெலே 1363 போட்டிகளில் ஆடி 1,281 கோல்களை அடித்திருக்கிறார். இவற்றில் தனது நாட்டுக்காக 92 சர்வதேசப் போட்டிகளில் அவர் அடித்த 92 கோல்களும் அடங்கும்.
கால்பந்து வரலாற்றில் உலகக் கோப்பை வென்ற அணியில் 3 முறை இடம்பெற்ற ஒரே வீரர் இவர் மட்டும்தான். 1958, 1962, 1970 என மூன்று முறை பிரேசில் அணி உலகக் கோப்பையை வென்றபோதும் அவர் அணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.