காணாமல் ஆக்கப்பட்ட இருவரின் தந்தையர்கள் உயிரிழப்பு

முல்லைத்தீவு முள்ளியவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த, காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளைத் தேடி தொடர்ந்து போராடி வந்த இரு தந்தையர்கள் உயிரிழந்துள்ளனர்.

முள்ளியவளை 3ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த பரமசாமி சிறிஸ்கந்தராசா என்பவர் மாரடைப்புக் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். இவர் ஒரு மாவீரரின் தந்தையாவார். அத்துடன் இவரின் மகனான சிறிஸ்கந்தராசா யுகேன் என்பவர் இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முள்ளியவளை நாவற்காட்டுப் பகுதியைச் சேர்ந்த இரண்டு மாவீரர்களின் தந்தையாரான வெள்ளையன் அழகன் என்பவர் நேற்று முன்தினம் திடீரென மரணமடைந்துள்ளார்.

Yuken காணாமல் ஆக்கப்பட்ட இருவரின் தந்தையர்கள் உயிரிழப்புஇவரது மகளான அழகன் கலைச்செல்வி முள்ளிவாய்க்காலில் படையினரின் கட்டுப்பாட்டில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட நிலையில், தனது மகளைத் தேடி இவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். நோயினால் பீடிக்கப்பட்டிருந்த இவர் நேற்று முன்னதினம் திடீரென மரணமானார்.

Kalaiselvi காணாமல் ஆக்கப்பட்ட இருவரின் தந்தையர்கள் உயிரிழப்புகடந்த இரண்டு வருடங்களாக இடம்பெற்று வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தில், 55இற்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர்கள் உயிரிழந்துள்ளமை கவலையளிக்கும் ஒரு விடயமாக உள்ளது.