காசா சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் கல்லறைகளாக மாறிவருவதாகவும், 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாகவும் ஐ.நாவின் சிறுவர்களுக்கான அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. இதுவரையில் அங்கு 3542 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அதன் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் ஜெனீவாவில் செவ்வாய்கிழமை (31) தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் குண்டுகளால் மட்டும் கொல்லப்படவில்லை நீரின்றியும் இறக்கின்றனர். அங்குள்ள மக்களின் தேவைகளுடன் ஒப்பிடும்போது 5 விகித நீரே வழங்கப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேசயம், இதுவரை இடம்பெற்ற தாக்குதல்களில் 3542 சிறுவர்கள் உட்பட 8525 பொதுமக்கள் காசாவில் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 2187 பெண்கள் எனவும் 21,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, பாலஸ்தீனத்தில் காசாவில் இடம்பெறும் மனிதப்பேரவலத்தை ஐ.நா தடுத்து நிறுத்த முடியாத மனவேதனையில் நியூயோர்க்கைத் தயமாகக் கொண்ட மனித உரிமைகண் ஆணைக்குழுவின் தலைவர் கிரக் மொகபீர் தனது பதவியை துறந்துள்ளார்.