மாற்றுத் திறனாளிகளுக்கான சித்த ஆயுர்வேத வைத்திய சேவை தொடர்பான விழிப்புணர்வு

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் தம்பலகாமம் மருதம் மாற்றுத் திறனாளி சங்கத்தின் மாதாந்த கூட்டமும் உள ஆரோக்கியம் உணவு பழக்க வழக்கம் தொடர்பான கலந்துரையாடல் திங்கட்கிழமை(30) புதுக்குடியிருப்பு கிராம சேவகர் கட்டிடத்தில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின்  வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற இந் நிகழ்வில் கப்பல்துறை ஆயுர்வேத தளவைத்தியசாலையின் வைத்தியர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டதுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகள்  ,ஆரோக்கியமான உடல் உள சுகாதாரம் தொடர்பிலும் விழிப்புணர்வூட்டப்பட்டது.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் ப.சுதன்,மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் த.பிரணவன் உட்பட பெற்றார்கள்,சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.