கற்பிட்டி பகுதியில் 23 பேர் கைது – சட்டவிரோத கடல் பயணம் மேற்கொள்ள இருந்ததாகக் குற்றச்சாட்டு

402 Views

சட்டவிரோத படகு பயணம் மூலம் வெளிநாடு செல்ல முயன்றதாகக் கூறி வடக்கு – கிழக்கு பகுதியைச் சோ்ந்த 23 பேர் மற்றும் அவர்களை ஏற்றிச் சென்ற சாரதி ஆகியோர் கடற்படையினரால் கற்பிட்டி பகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்பிட்டி – குரக்கன்ஹேன பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது இவா்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும் விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக கடல் வழியாக வெளிநாடொன்றுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டமை தெரியவந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 21 ஆண்கள், 3 பெண்கள் அடங்குகின்றனர்.

அவர்களில் 9பேர் மட்டக்கப்பையும் 6 பேர் யாழ்ப்பாணத்தையும் 5 பேர் முல்லைத்தீவையும் 3 பேர் திருகோணமலையையும் சேர்ந்தவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.   சாரதி புத்தளத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.

Leave a Reply