ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் –  மகிழ்ச்சியில் பெற்றோர்

தென்னாப்பிரிக்காவில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்திருப்பதாக  தென்னாப்பிரிக்க அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு தெரிவித்துள்ளது. உறுதிசெய்யப்பட்டால் குழந்தைப் பிறப்பில் இது ஓர் உலக சாதனையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோசியாமி தமரா சித்தோல் என்ற 10 குழந்தைகளின் தாய்   கூறும் போது, “பிறந்தவற்றில் 7 ஆண் குழந்தைகள், 3 பெண்குழந்தைகள். நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். உணர்ச்சிவயப்பட்டிருக்கிறேன். என்னால் அதிகம் பேச முடியாது ” என்றார்.   ஸ்கேன் செய்து பார்த்தபோது 8 குழந்தைகள் இருப்பது தெரிந்ததாகவும் ஆனால் பிரசவத்தின்போது 10 குழந்தைகள் பிறந்தது தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டதாகவும் அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply