ஐ.நா.வில் இறையாண்மை கொண்ட ஒரு நாடாக இலங்கை நிற்க முடியும் – அமைச்சர் தினேஷ்

319 Views

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை ஓர் இறையாண்மை கொண்ட நாடாக நிற்க முடியும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித் துள்ளார்.

கண்டியில் வெளிவிவகார அமைச்சின் அலுவலகம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டபோது உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது மக்கள் நம்பிக்கை வைத்து, இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மை பாதுகாக்க அவருக்கு ஆணையை வழங்கியுள்ளனர்.

ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கதைகளை எடுத்துச் செல்லும் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரிக்கும் சில குழுக்கள் இருக்கின்றன எனவும் அமைச்சர் சாடினார்.

முன்னாள் அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியது என்றும் அதன்படி இலங்கை நாட்டின் சட்டம் மற்றும் அரசமைப்பின்படி செயல்படும் எனவும் நாட்டின் மக்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளாதாகவும் அவர் சொன்னார்.

அனைத்து நாடுகளும் இறையாண்மை கொண்டவை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதுடன், மற்ற நட்பு நாடுகளிற்கு இலங்கையின் நிலைபற்றி அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

Leave a Reply