எவரெஸ்ட் மலையில் அதிக மக்கள் கூட்டம்

உலகம் முழுவதும் மக்களிடையே மலையேற்றம் மேற்கொள்வது பிரபலமடைந்து வருவதால், சமீப காலமாக எவரெஸ்டிலும் கூட்டம் நிறைந்திருப்பதாக அறிய முடிகின்றது.

மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா எடுத்துள்ள புகைப்படத்தில் காணப்படும் கூட்டம் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது. இப்புகைப்படம் எவரெஸ்ட்டை அடைவதற்கு மலையேற்ற வீரர்கள் சந்திக்கும் சவால்களை காட்டுகின்றது.

மலையேற்றம் மேற்கொள்வதற்கு பாதுகாப்பான பருவம் தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு வாரத்திற்கு மலையில் கூட்டம் அதிகம் காணப்படாது. ஆனால் அந்த குறிப்பிட்ட பருவம் முடிவடைவதற்கு இரண்டு மூன்று நாட்கள் இருக்கும் போது அதிகமான கூட்டம் இருக்கும், ஏனெனில் பலர் ஒன்றாக சேர்ந்து மலையேற்றம் செய்யும் வகையில் திட்டமிடுவதாலேயே இவ்வாறான நெரிசல் ஏற்படுகின்றது.

1992ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 7 தடவைகள் எவரெஸ் உச்சியை அடைந்த டுஜிமோவிட்ஸ் தெரிவிக்கையில், இவ்வாறு நெரிசல் இருப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

ஏறும் போது உள்ள ஆபத்தை விட இறங்கும் போது இவர்கள் பிராணவாயு பற்றாமையை எதிர்நோக்குகின்றனர். இதனால் இவர்கள் பாதிக்கப்படுவதாக அவர் கூறுகின்றார்.