எமது நிலத்தை மீட்பதற்கான நேரம் இது (மேலதிக பதிவு)

684 Views

பாவனையில் இல்லாத அரச காணிகளை, மத்தியதர வகுப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு, உரிமையாளர்களால் பராமரிக்கப்படாமல் இருக்கின்ற காணித்துண்டுகளை உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் காணி கோரும் இளம் தொழில் முனைப்பாளர்களுக்கு (45 வயதுக்கு உட்பட்டோர்) நிபந்தனைகளுடன் வழங்க அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு, மாங்குளம், நெடுங்கேணி, வவுனியா வடக்கு, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, மாந்தை மேற்கு  போன்ற பிரதேச செயலர் பிரிவுகளில் பயன்பாடற்ற அரச / மத்தியதர வகுப்பு (MC Land)  அதிகம் உள்ளதால், அந்தப் பிரதேசங்களில் காணிகளைப் பெறுவது சாத்தியமானதாக இருக்கும்.

விண்ணப்பங்களை பிரதி எடுத்து நிரப்பி பதிவுத் தபாலிலும் அனுப்பி வைக்கலாம்.

விண்ணப்ப முடிவு திகதி 15.11.2020  வரை நீடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தின் மாதிரி வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் இந்த காணியைப் பதிவு செய்யாதவிடத்து, தமிழ் மக்கள் அல்லாதவர்கள் கூட பெருமளவில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை பெற்றுக்கொண்டு தங்கள் தொழில்களை/விவசாயத்தை முன்னெடுத்து காலப்போக்கில் நிரந்தரமாக அந்த பிரதேசங்களில் குடியேறிவிடவும் கூடும்…

இன்று உங்களுக்கு வாய்ப்புகள் தரப்படுகின்றன. அதை நாம் பயன்படுத்தாமல் விடுவதால் வாய்ப்புகளை இன்னொருவர் பறித்துக்கொள்வார் அல்லது பயன்படுத்திக்கொள்வார்!!

எனவே இவ்விடயத்தில் அவ்வப்பிரதேச மக்கள் ஆர்வத்துடன், உரிய அதிகாரிகளிடம் ஆலோசனையை பெற்று விண்ணப்பித்தல் எமது வருங்கால சந்ததிக்கு வாய்ப்புகளை வழங்கும்.

இவ்விடையத்தில் சமூக அமைப்புகள் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்பது இன்றைய தேவையாக உள்ளது.

 

Leave a Reply