“எனக்கு வாழ பிடிக்கவில்லை, தற்கொலை செய்து கொள்கிறேன்” மாணவி தற்கொலை

497 Views

கிளிநொச்சி – யூனியன்குளம், மாணிக்கப் பிள்ளையார் கோயில் வீதியில் மாணவி ஒருவர் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோணாவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றுவரும் புவனேஸ்வரன் கார்விழி (கயல்) எனும் (15-வயது) மாணவியே இவ்வாறு தற்காெலை செய்து காெண்டுள்ளார்.

தந்தை இரண்டு திருமணம் முடித்த நிலையில் பிரிந்திருந்த குடும்பம் இரண்டு மாதங்களாக சுமூக நிலையை அடைந்திருந்தது.

இவரது தாயார் கூலி வேலைக்குச் சென்று வருபவர்.

குறித்த மாணவி நேற்றைய தினம் ஸ்கந்தபுரம் சென்று மாலை மூன்று மணியளவில் வீடு திரும்பி வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவியின் அம்மம்மா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரை பார்க்க சென்றிருந்த சமயத்தில் அம்மம்மாவின் வீட்டில் விளக்கு ஏற்றிவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்றே தற்கொலை செய்துள்ளார்.

“எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். பெற்றோர் என்னில் கவனிப்பு இல்லை” எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டே தூக்கிட்டு இறந்துள்ளார்.

இரவு 12 மணியளவிலேயே கிளிநொச்சி பொலிஸார் அங்கு வந்துள்ளனர். அறிவித்து நான்கு மணித்தியாலங்கள் வரை தாமதமாக பொலிஸார் வந்தது அப்பகுதி மக்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply