எதிர்காலத்தில் பெருந்தொற்றுகள் பரவுவதை தடுக்க ஒன்றுக்கு ஜி7 நாடுகள் புதிய திட்டம்

பிரிட்டனில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில்,  எதிர்காலத்தில் பெருந்தொற்றுகள் பரவுவதை தடுக்க புதிய திட்டம் ஒன்றுக்கு ஜி7 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

கடந்த ஆண்டு இந்த தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, 175 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 3.7 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.

இது போன்ற பெருந்தொற்றால், மீண்டும் மனித இழப்பொ, பொருளாதார இழப்போ ஏற்படக்கூடாது என்பதே இந்த திட்டத்தின் குறிக்கோள்.

எதிர்காலத்தில் வரும் நோய்களை 100 நாட்களுக்கும் குறைவான காலத்தில் கண்டறிய வேண்டும். அதற்கான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிளை தயாரிக்க மற்றும் உரிமம் பெற குறைந்த நேரமே எடுத்துக் கொள்ளவேண்டும்.

உலக கண்காணிப்பு வலைப்பின்னல் மற்றும் மரபணு வரிசைப்படுத்தல் திறனை வலுவூட்டுதல் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தை வலுப்படுத்த ஆதரவளித்தல் ஆகிய விஷயங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன.