உலங்கு வானூர்தி விபத்து பிரபல கூடைப்பந்து வீரர் உட்பட 9 பேர் பலி!

590 Views

அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரைனட் லொஸ் ஏஞ்சல்ஸ் அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற உலங்கு வானூர்தி விபத்தில் பலியாகியுள்ளார்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சுமார் 65 கிமீ தொலைவில் உள்ள கலாபசாஸ் பகுதியில் உள்ள கரடுமுரடான மலைப்பகுதியில், உலங்கு வானூர்தி விழுந்து நொறுங்கியது.

மோசமான வானிலை காரணமாக இவ்விபத்து ஏற்பட்டு விழுந்த சிறிது நேரத்தில் உலங்கு வானூர்தி தீப்பற்றி எரிந்தது.

இந்த விபத்தின் பாேது அமெரிக்காவின் கோப் பிரைனட், அவரது மகள் கியன்னா உள்ளிட்ட 9 பேர் என, வானூர்தியில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

41 வயது நிரம்பிய கோப், அமெரிக்காவின் கூடைப்பந்து கூட்டமைப்பின் மிக முக்கியமான வீரர் ஆவார்.

உலகின் தலைசிறந்த கூடைப்பந்து வீரர்களில் ஒருவரான இவர், 5 முறை என்பிஏ சாம்பியன்ஷிப் பட்டத்தைவும், ஒலிம்பிக்கில் இரண்டு முறை தங்கப்பதக்கமும் வென்றுள்ளார். லொஸ்ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக 20 ஆண்டுகளாக விளையாடியுள்ளார்.

Leave a Reply