உத்தேச போர்ட்சிட்டி ஆணைக் குழு சட்ட மூலத்தின் விளைவுகள் குறித்து மஞ்சுள கஜநாயக்க எச்சரிக்கை

163 Views

அரசாங்கத்தின் உத்தேச போர்ட்சிட்டி ஆணைக்குழுசட்ட மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை பறிக்கும் விதத்தில் காணப்படுவதாக தெரிவித்த   மஞ்சுள கஜநாயக்க, எதிர்காலத்தில் கொழும்பு துறை முக நகரத்திற்குள் உருவாகும் நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு நாடாளுமன்றம் தலையிடமுடியாத நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

இது குறிதது மேலும் தெரிவித்த தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, “அரசமைப்பில் பொதுமக்களின் உச்ச உயர் நிலையை உறுதிசெய்யும் சட்டமூலத்தையும் இந்த சட்டம் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் காணப்படுகின்றது.

போர்ட்சிட்டி ஆணைக்குழுசட்டம் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அதிகாரங்களை தாங்கே பரவலாக்கம் செய்வார்கள்.” என்றார்

மேலும் உத்தேச சட்டம் மூலம் பிரச்சினைகளிற்கு சர்வதேச அமைப்பு தீர்வை காணும் நிலையும் ஏற்படும் அத்தோடு நாட்டின் இறைமைக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply