உத்தர பிரதேச மாநிலம் பதேகாபாத் மாவட்டம் தாரியாயி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் அமைத்திருந்த ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகள் சரியான முறையில் மூடப்படாததால் பல குழந்தைகளின் உயிர்கள் பறிபோய் உள்ளன. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும், பலர் ஆழ்குழாய் கிணறு விஷயத்தில் இன்னும் அலட்சியமாகவே உள்ளனர்.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு குழந்தை உத்தரபிரதேசத்தில் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்துள்ளது அப்பிரதேச மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.