ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்துவோம் – திமுக

சிறீலங்காவில் இருந்து வந்து, இந்தியாவில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் நாடற்ற சிறீலங்காத் தமிழர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் இருந்து தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள், தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகள் முகாமில்  வசிக்கும்  ஈழ தமிழர் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசை திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தும் என அதன் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து்ளளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் விஞ்ஞாபன அறிக்கையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார். சிறீலங்கா போர்க் குற்றங்கள், இனப் படுகொலை குறித்து சுதந்திரமான – நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்த உலக  நாடுகளை இந்திய அரசு வலியுறுத்திச் செயல்பட வேண்டும் என மத்திய அரசை தி.மு.க வலியுறுத்தும், ஈழ தமிழர் சிக்கலுக்கு தீர்வு காண புலம்பெயர் தமிழரிடைய ஐ.நா மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

தாயகம் திரும்பிய இந்திய வம்சாவழியினராகிய மலைகயத் தமிழர்கள், 30 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகள் முகாம்களில் இருக்கும்  சிறீலங்கா தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.