காடுகளை கையகப்படுத்துவதற்கு இராணுவத்தினர் முயற்சி- சாணக்கியன் குற்றச்சாட்டு

பட்டிப்பளை தாந்தமலை பிரதேசத்தில் உள்ள காடுகளை கையகப்படுத்துவதற்கு இராணுவத்தினர் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றம்சுமத்தியுள்ளர்.
பட்டிப்பளை தாந்தமலை பிரதேசத்தில் உள்ள காடுகளை கையகப்படுத்துவதற்கு இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கோவிந்தன் கருணாகரனும் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளதாவது,
“இன்று பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள தாந்தாமலை பிரதேசத்தில் உள்ள 1500 ஏக்கர் காடுகளை இராணுவத்தினர் சட்டவிரோதமாக கையகப்படுத்துவதற்கான முயற்சி நடந்து வருகின்றது. இதனை இன்று நடைபெற்று கொண்டிருக்கும் அபிவிருத்தி குழு கூட்டத்தில் நானும் நாடாளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருனாகரன் ஆகியோர் உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும் என இக்கூட்டத்திலே கேட்டுக்கொண்டதுக்கு அமைவாக இணைத்தலைவர் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாலேந்திரன் அவர்களும் ஏற்றுக்கொண்டு இப்பிரச்சனை சம்பந்தமாக பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலே ஏகமனதாக தீர்மானம் எடுத்து மாவட்ட அபிவிருத்தி குழுவில் தீர்மானம் எடுப்பதற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது” என்றார்.