ஈழத் தமிழர் ஐ.நா. விவகாரம்: கோவையில் நாளை பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்

568 Views

சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை தருகிறார். இந்த வேளையில் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படும் என  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு. ராமகிருட்டிணன் அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் சிறீலங்காவிற்கு எதிரான பிரேரணையில் இந்தியா வாக்களிக்காது புறக்கணித்தமையால், பிரதமர் மோடிக்கு எதிராக இந்தக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் 6 நாடுகள், இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. இந்தியாவின் இந்த நிலைப்பாடு கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.

அப்போது, ஈழத் தமிழருக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் தி.க. அறிவித்துள்ளது. கோவை பீளைமேடு பகுதியில் இந்த போராட்டம் நடத்தப்படும் என கோவை கு.ராமகிருட்டிணன் அறிவித்திருக்கிறார்.

 

 

Leave a Reply