ஈரானின் செய்தி இணையத் தளங்களை முடக்கிய  அமெரிக்கா

151 Views

ஐ.நா. பாதுகாப்புசபையில் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா,பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவற்றுடனும், ஜெர்மனியுடனும் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் ஈரான் ஏற்படுத்தியது.

ஆனால் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று வர்ணிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், அமெரிக்க நலன்களுக்கு எதிரானது என்று அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் குற்றம் சாட்டினார். அத்துடன் அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும் அவர் 2018 மே மாதம் 8-ந் தேதி அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதித்தது. இதில் இருந்து அவ்விரு நாளுகளுக்கும் இடையே தீராப்பகை மூண்டுள்ளது. அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்றும் இந்தப் பகையில் மாற்றம் இல்லை.

இந்தநிலையில் ஈரான் நாட்டின் செய்தி இணையதளங்களை அமெரிக்கா அதிரடியாக முடக்கி உள்ளது. தவறான தகவல்களைப் பரப்புவதாக குற்றம் சாட்டி இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது.

Leave a Reply