இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதல்களினால் பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்படுவதால் இந்த இருவருக்கும் ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச்சபையின் மத்திய கிழக்கிற்கான பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
பெல்ஜியத்தில் உள்ள நான்கு வர்த்தக அமைப்புக்கள் இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதி வர்த்தகத்தை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ள நிலையில் கடந்த புதன்கிழமை (2) மன்னிப்புச்சபை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு அதிகளவு ஆயுதங்களை அமெரிக்காவும், ஜேர்மனியுமே வழங்கி வருகின்றன. வெள்ளைமாளிகை இஸ்ரேலுக்கு 14 பில்லியன் டொலர்கள் நிதி உதவியையும் வழங்க தீர்மானித்துள்ளது.