இஸ்ரேல் – பாலஸ்தீன போர் – 22 ஊடகவியலாளர்கள் பலி

கடந்த 7 ஆம் நாள் ஆரம்பமாகிய இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல்களில் இதுவரையில் 22 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளாதாக ஊடகவியலாளர்களை பாதுகாப்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்களில் 18 பேர் பாலஸ்தீன ஊடகவியலாளர்கள், 3 பேர் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் லெபனானை சேர்ந்தவர். அவர்களில் 15 பேர் இஸ்ரேலின் தாக்குதல்களிலும், 2 பேர் ஹமாஸ் நடத்திய தாக்குதல்களிலும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

ஊடகவிலயாளர்களும் பொதுமக்களே, அவர்கள் போரின்போது முக்கிய பணிகளில் ஈடுபடுவதுண்டு. அவர்களை தாக்குவது தவிர்க்கப்பட வேண்டும் என அது மேலும் தெரிவித்துள்ளது.