தாய்லாந்தில் தங்கியிருந்த இலங்கையின் முன்னாள் அரசதலைவர் கோத்தபாயா ராஜபக்சா வெள்ளிக்கிழமை (2) மாலை சிங்கப்பூர் ஏயர்லைன் விமானம் மூலம் இலங்கை திரும்பியுள்ளார்.
அவரை விமான நிலையத்தில் பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளதுடன், விமான நிலையத்தின் பாதுகாப்புக்களும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
கொழும்பில் உள்ள விஜேராமா மாவத்தையில் உள்ள அரச வீட்டில் அவர் தங்கியிருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் தங்கியிருப்பதற்காக கிறீன் காட் எனப்படும் நுளைவு அனுமதிக்கு கோத்தபாயா விண்ணப்பித்துள்ளதாகவும், அது கிடைக்கும் வரை இலங்கையில் தங்கியிருப்பார் எனவும் அரச தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஜுலை மாதம் இலங்கையில் இருந்து வான்படை விமானம் மூலம் மாலைதீவு வழியாக சிங்கப்பூருக்கு தப்பியோடி கோத்தபாயா, சிங்கப்பூர் அரசு தங்கியிருப்பதற்கான அனுமதியை நீடிக்க மறுத்ததால் தாய்லாந்துக்கு சென்றிருந்தார். தாய்லாந்து அரசு அவரை விடுதியை விட்டு வெளியேற அனுமாதிக்கதால் அவர் தற்போது நாடு திருப்பியுன்னார்.