புலம்பெயர் தமிழ்மக்களின் கூட்டணியின் உதவி – மக்கள் நன்றி தெரிவிப்பு

புலம்பெயர் தமிழ் மக்களின் கூட்டணி தமிழர் தாயகத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. எல்லைப்புற கிராமங்களை அபிவிருத்தி செய்து அங்கு தமிழ் மக்களை தங்கவைக்க முயற்சிகளை மேற்கொள்வதே அதன் பிரதான நோக்கமாக இருக்கின்றது.

இந்த நிலையில் விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான கடன் உதவிகளை அது வழங்கி வருகின்றது.

மேலும் அனைத்துலக நாடுகளையும் இணைத்து தாயகத்தில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதே அதன் நோக்கமாக உள்ளது. அண்மையில் .நாவின் யுனிசெப் அமைப்புடன் உடன்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.