‘இலங்கையின் கொலைக்களங்கள்’ ஆவணப்படத்தை தயாரித்த சனல் – 4 ஜோன் ஸ்னோ ஓய்வு பெறுகின்றார்

ஈழத்தமிழர்களின் நன்றிக்குரியவரும் ஈழத்தமிழர்களால் என்றுமே மறக்க முடியாதவருமான சேனல் 4 ஊடகத்தின் மூத்த, மிகச் சிறந்த செய்தித் தொகுப்பாளர் ஜோன் ஸ்னோ அவர்கள் 32 ஆண்டுகள் சேவையாற்றிய பின்னர் சனல் – 4 ஊடகத்தின் செய்தித் தொகுப்பாளர் பணியில் இருந்து இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெறுவார் என்று ஜோன் ஸ்னோ ஏப்ரல் 30இல் அறிவித்துள்ளார்.

உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ என்ற ஆவணப்படத்தினை தயாரித்த ஜோன் ஸ்னோ, “உலக நாடுகள் பலவற்றில் காட்சிப்படுத்தப்பட்டும், உலக சமுதாயமும் ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கைக்குத் தண்டனை அளிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டன. இந்த தருணத்தில்தான் இந்தக் காட்சிகளை வெளியிடுகிறோம்” என்று கூறியிருந்தார்.