இறைச்சி வாங்க சென்றவருக்கும் கடைகாரருக்கும் வாய்தர்க்கம் – கத்தி குத்தில் ஒருவர் படுகாயம்

1,051 Views

யாழ்ப்பாணம் கோப்பாய், இறைச்சிக் கடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தில் இறைச்சி வாங்கச் சென்றவருக்கு கடைக்காரர் கத்தியால் குத்தியதால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று காலை  இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் கோப்பாயை சேர்ந்த 40 வயதான ஒருவர்
படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறைச்சி வாங்க சென்றவர் பசு மாடு போல இருக்கு என கூறியதால் கோபமடைந்த நிலையில், இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

மதுபோதையில் இறைச்சிவாங்க கடைக்கு வந்ததாகவும் தன்னை தாக்கியதாக கடைக்காரர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

கடைக்காரர் புத்தளத்தைச் சேர்ந்தவர் சுன்னாகத்தில் வசிக்கிறார். இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply