இரு நூறு வருடங்கள் இடம்பெற்ற நத்தார் பண்டிகை பிரார்த்தனை நிறுத்தம்

பிரான்ஸ் நாட்டில் இந்த வருடம் இடம்பெற்ற தீ விபத்தினால் அழிவைச் சந்தித்த நோட் டேம் தேவாலயத்தில் 200 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்றுவந்த நத்தார் தின ஆராதனைகள் முதல் முறையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸ் புரட்சியின் பின்னர் முதல்முறையாக ஆராதனைகளை நிறுத்தப்பட்டுள்ளது பிரான்ஸ் மக்களையும், அரசையும் கவலைகொள்ள வைத்துள்ளது.

இந்த வருடம் இடம்பெற்ற தீவிபத்தினால் மிகவும் பழமையான இந்த தேவாலையம் மிகப்பெரும் அழிவைச் சந்தித்திருந்தது. தீ விபத்தினால் தேவாலையத்தின் கட்டுமானம் மிகப்பெரும் சேதத்தை சந்தித்திருப்பதாலும், வெள்ளீயம் போன்ற வேதியப் பொருட்கள் தீயில் எரிந்து அதிகளவான நச்சு வாயுக்கள் காற்றில் பரவியுள்ளதாலும் தேவாலையத்திற்குள் மக்களை அனுமதிக்க முடியாது என பிரான்ஸ் நாட்டின் கட்டிடப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Norte dame இரு நூறு வருடங்கள் இடம்பெற்ற நத்தார் பண்டிகை பிரார்த்தனை நிறுத்தம்இந்த தேவாலையத்தின் மீள் கட்டுமானப் பணிகள் 2021 ஆம் ஆண்டே ஆரம்பிப்படவுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.