இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறை ; மாவை அறிவிப்பு

இலங்கை அரசாங்கம், இனப்பிரச்சினைக்கான உரிய தீர்வைத் தராவிட்டால், சர்வதேசத்துடன் இணைந்து, புதிய அணுகுமுறையில் இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவோமென்று, இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம், நேற்று வெள்ளிக்கிழமை மாலை, வடமராட்சி – நெல்லியடி தொகுதியிலுள்ள உடுப்பிட்டி தொகுதி தலைவர் ப.சுரேந்திரன் மற்றும் பருதித்துறை தொகுதி உப தலைவர் ச.சுகிர்தன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். குறித்த கூட்டத்தில், தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களான சகிகலா ரவிராஜ், சி.சிறிதரன், த.தபேந்திரன், ஈ.சரவணபவன், இமானுவேல் ஆனோல்ட், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பருத்தித்துறை, உடுப்பிட்டி தொகுதி தமிழரசுக் கட்சி நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் எனச் சுமார் 100 பேர் வரை கலந்துகொண்டிருந்தனர்.