இந்தோனேசிய குகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியம் ‘உலகின் ‘பழமையான கலைப்படைப்பு’

வரலாற்றுக்கு முந்தைய வேட்டைக் காட்சியை சித்தரிக்கும் இந்த 4.5 மீட்டர் குகை ஓவியம் ஏறக்குறைய 44,000 ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் பழமையான உருவக கலைப்படைப்பாக இருக்கலாம் எனவும் இந்த ஓவியம் ஒரு மேம்பட்ட கலை கலாச்சாரத்தை சுட்டிக்காட்டுகிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓவியத்தின் தொன்மையை அறிவதற்காக நவீன கால அளவீட்டு சோதனைகளை மேற்கொணட ஆஸ்திரேலியாவின் கிரிஃபித் பல்கலைக்கழக குழு( Australia’s Griffith University ) சுண்ணாம்புக் குகை ஓவியம் குறைந்தது 43,900 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.