இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் காலமானார்

262 Views

இந்து முன்னணித் தலைவர் இராமகோபாலன் (97) கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி காலமானார்.

கடந்த 27ஆம் திகதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வந்த இராம.கோபாலனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

1980களிலிருந்து தமிழகம் முழுவதும் இந்து இயக்கங்களை வலுப்படுத்தியதில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது. இதனால் பாரதிய ஜனதாக் கட்சி தலைவர்கள் அவரிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.

அவரின் மறைவிற்கு அரசியல்வாதிகள், பிரபலங்கள் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றர்.

Leave a Reply