இந்திய வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்களின் பணம் அதிகாரிகளால் திருட்டு

பரோடா என்ற இந்திய வங்கியில் இருந்து வாடிக்கையாளர்களின் பெரும்தொகை பணத்தை முகவர்கள் திருடியுள்ளது உள்ளக கணக்காய்வின்போது தெரியவந்துள்ளது.

362 போரின் கணக்குகளில் இருந்து 27,000 அமெரிக்க டொலர்கள் (2.2 மில்லியன் இந்திய ரூபாய்கள்) திருடப்பட்டுள்ளன. வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குடன் வேறு நபர்களின் தொலைபேசி இலக்கங்களை இணைந்து வங்கியில் பணிபுரியும் ஊழியர்களின் துணையுடன் இந்த திருட்டுக்கள் நிகழந்துள்ளன.

இணைக்கப்பட்ட இனந்தெரியாத இலக்கங்கள் வங்கி ஊழியர்கள், முகாமையாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், முகவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களினுடையது என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களே பணத்தை திருடியுள்ளனர். செல்லிட தொலைபேசிகளில் தரையிறக்கப்படும் அப்ஸ் என்ற மென்பொருட்களை வாடிக்கையாளர்கள் தரையிறக்கம் செய்து தமது தகவல்களை அதில் பதியவேண்டும் என கூறி அவர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது.

ஆறு வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து 110,000 ரூபாய்களும், ஒரு வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து 170,000 ரூபாய்களும், திருடப்பட்டுள்ளது. ஒரு முகவர் 390,000 ரூபாய்கள் வரை திருடியுள்ளார்.

இந்த திருட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாக பணத்தை மீட்டு வாடிக்கையாளர்களின் கணக்கில் வைப்பிலிடுமாறு வங்கியின் தலைமையகம் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.