இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆபத்தான நிலையில் டெல்லி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் 13ஆவது குடியரசுத் தலைவராக பதவி வகித்த பிரணாப் முகர்ஜி, நேற்று(10) வழமையான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் நேற்று இரவு திடீரென அவருக்கு மூளையில் இரத்தக் கட்டி இருப்பதாகக் கூறி அதை நீக்குவதற்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் இராணுவ மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவர் சுவாசப் பிரச்சினையை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுள்ளது. இருந்தும் அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசால வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.