இந்திய சுகாதார அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி

இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜென் கடும் சுகவீனம் காரணமாக வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓக்சியின் வாயுவின் பற்றாக்குறை மற்றும் கடும் காச்சல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள போதும், அவருக்கு கொரோனா தொற்றுநோய் உள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என டெல்லி வட்டாரங்கள் இன்று (16) தெரிவித்துள்ளன.

இதனிடையே இந்தியாவில் கோவிட்-19 இன் தாக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு இதுவரை 300,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்தியா நான்காவது நிலையில் உள்ளது. டில்லியில் மட்டும் 40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.