இந்திய – சீன எல்லைப் பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொள்ளுவர் ரஷ்யா

இந்தியா, சீனாவிற்கிடையிலான எல்லைப் பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொள்ளுவார்கள் என ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்திய – சீன எல்லைப் பகுதியில் இரு நாட்டு இராணுவத்தினரினதும் தாக்குதலையடுத்து ரஷ்யா நடத்திய RIC  கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்கு முதலில் இந்தியா மறுப்புத் தெரிவித்துள்ள போதும், பின்னர் கலந்து கொள்வதற்கு ஒப்புக் கொண்டது.

காணொளி ஒன்றுகூடலில்  உரையாற்றிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அனைத்து நாடுகளும் சர்வதேச விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதேவேளை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உரையாற்றுகையில், இந்தியா – சீனாவிற்கிடையிலான எல்லைப் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளுமே தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளும். மேலும் அமைதியான முறையில் பிரச்சினையைத் தீர்ப்பதில் இரு நாடுகளும் உறுதியாக உள்ளன. இது தொடர்பாக இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என்று தெரிவித்தார்.