ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சுத்தீகரிக்கப்பட்ட எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 7.9 மில்லியன் தொன் எண்ணையை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.5 விகிதம் அதிகமாகும். 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 3 மடங்கு அதிகமாகும்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எண்ணை எற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியாவே முதலிடத்தில் உள்ளது. 2021 ஆம் ஆண்டு இந்தியா ரூஆவது இடத்திலும் 2022 ஆம் ஆண்டு ஆறாவது இடத்திலும் இருந்தது. இந்தவரும் அது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியள்ளது.
இந்தியாவில் சீனாவுக்கு அடுத்ததாக மிகப்பெரும் எண்ணை சுத்தீகரிப்பு ஆலைகள் உள்ளன. அது ரஸ்யாவில் இருந்தே 40 விகிதமான எண்ணைகளை கொள்வனவு செய்கின்றது. உக்ரைன் போரை தொடர்ந்து மேற்குலகம் விதித்த தடைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திவரும் இந்தியா ரஸ்யாவின் எண்ணைகளை தனது நிறுவனங்களின் ஊடாக விற்பனை செய்து வருகின்றது.