இந்தியாவுக்கே முன்னுரிமை- இலங்கையின் கொள்கைக்கு இந்தியா பாராட்டு

347 Views

பாதுகாப்பு விடயங்களில் இந்தியாவுக்கு முன்னுரிமை கொடுப்பது என்ற இலங்கையின் கொள்கையை இந்தியா  பாராட்டியுள்ளது என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துக் கூறிய இந்திய பிரதிதூதுவர் வினோத் ஜேக்கப், இந்தியாவுக்கு பாதுகாப்பு விடயங்களில் முன்னுரிமை அளிப்பது என்ற இலங்கையின் தெளிவான தீர்மானம் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது.  இது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து சரியான மதீப்பீடு இடம்பெற்றுள்ளதை வெளிப்படுத்துகின்றது.

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக சிக்குண்டிருந்த இரு நாடுகளினதும் பிரஜைகளை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பும் விடயத்தை இலங்கையும் இந்தியாவும்; சுமூகமான முறையில் முன்னெடுத்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply