இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த இஸ்ரேலிய கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்

564 Views

இந்தியாவுக்கு வரும் இஸ்ரேலிய கப்பல் ஒன்றின் மீது ஈரான் ஏவுகணை தாக்கியுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

தாண்சானியாவிலிருந்து இந்தியாவுக்கு சென்று கொண்டிருக்கும் அந்தக் கப்பல் தனது பயணத்தைத் தொடர முடிந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் ஹைஃபாவைச் சேர்ந்த எக்ஸ்டி மேனேஜ்மென்ட்  என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை கூறியுள்ளது.

இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்களை அதிகரித்திருப்பதாக இஸ்ரேலும் ஈரானும் ஒருவர் மீது ஒருவர்  குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply