இந்தியாவில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

463 Views

இந்தியாவில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை 4.13 இலட்சமாக அதிகரித்துள்ள நிலையில், இதில்  மேற்கு வங்க மாநிலம்  முதல்  இடத்தில் உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மேலவையில் மத்திய சமூக நீதி அமைச்சர்  தாவர் சந்த் கெலாட் எழுத்துப்பூர்வ முறையில் இன்று அளித்துள்ள பதிலில், கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 4,13,670 பிச்சைக்காரர்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களில் ஆண்கள் 2,21,673 பேர்.  பெண்கள் 1,91,997 பேர்.  இவற்றில் மேற்கு வங்காளம் (81,224) முதல் இடத்தில் உள்ளது.  இதனை தொடர்ந்து உத்தர பிரதேசம் (65,835), ஆந்திர பிரதேசம் (30,218), பீகார் (29,723), மத்திய பிரதேசம் (28,695), ராஜஸ்தான் (25,853) ஆகியவை உள்ளன என்றும் மேலும் டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply