இந்தியாவில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 2,11,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 3,847 வைரஸ் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 73 இலட்சத்து 69 ஆயிரத்து 93 ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இது வரையில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 இலட்சத்து 15 ஆயிரத்து 235 ஆக பதிவாகியுள்ளது.