இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து

224 Views

இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இங்குதான் கொரோனா தொற்றுக்கு எதிரான கோவீஷீல்ட் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இத்தீவிபத்து அந்நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்ட நிர்வாக கட்டடத்தில்தான் ஏற்பட்டுள்ளது என்றும் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தில் தற்போது தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

Leave a Reply