“இந்தியா,சீனாவில் காற்று அசுத்தமாக உள்ளது” – டிரம்ப் குற்றச்சாட்டு

398 Views

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் சூழலில், நேற்று மாலை பிரதான வேட்பாளர்களுக்கிடையில் விவாதம் நடைபெற்றது.

90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில், கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு பொது முடக்கத்தை கொண்டு வருவது. பருவ நிலை மாற்றம், எரிபொருள் தொழிற்சாலைகளை மூடுவது  போன்றவை விவாதிக்கப்பட்டது.

இதில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா  வெளியேறியதை ஆதரிக்கும் வகையில் பேசிய டொனால்டு டிரம்ப், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவில் காற்று “அசுத்தமாக” உள்ளதாக எனக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,

“சீனாவை பாருங்கள், காற்று எவ்வளவு அசுத்தமாக உள்ளது. ரஷ்யா மற்றும் இந்தியாவில் காற்று அசுத்தமாக உள்ளது. நாம் டிரில்லியன் கணக்கான டாலர்களை மீட்க வேண்டியிருந்ததால், நான் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினேன். நாம் மிகவும் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டோம். பாரிஸ் உடன்படிக்கைக்காக நான் மில்லியன் கணக்கான வேலைகள், நிறுவனங்களை தியாகம் செய்ய மாட்டேன். இது மிகவும் நியாயமற்றது” என்றார்.

Leave a Reply