இங்கே வரவேண்டாம்! தமிழ் இடத்துக்கு போ! கத்தோலிக்க மதகுருவோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேரர்

இது சிங்கள இடம். இங்கே எதுவும் செய்ய வரவேண்டாம் என கத்தோலிக்க மத குரு ஒருவரை மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

கத்தோலிக்க மதகுரு ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு துண்டுபிரசுரங்களை விநியோகிஸ்துக் கொண்டிருந்த போது அந்த இடத்திற்கு வந்த மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கத்தோலிக்க மதகுருவுடன் முரண்பாட்டில் ஈடுபட்டார்.

இதனையடுத்து அவ்விடத்தில் சற்று பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் அவரோடு சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டனர்.

இதன்போது கடுமையாக பேசிய சுமணரத்ன தேரர், புலம்பெயர் புலி அமைக்கள் கத்தோலிக்க மதத்தினை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

இது சிங்கள இடம். இங்கே வந்து ஒன்றும் செய்ய முடியாது. தமிழ் இடத்தில் போய் இவற்றை செய்துகொள் என்று சுமணரத்ன தேரர் கடுமையாக பேசியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகளவில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply