ஆப்கானிஸ்தான் இராணுவ நிலைகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் நாட்டில் இராணுவ நிலைகள் மீது தலிபான் பயங்வரவாதிகள்நடத்திய தாக்குதல் 14 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ள தெற்காசிய நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளதுடன், முழு நாட்டையும் கைப்பற்றும் நோக்கில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

இதனால் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அத்துடன் பிரச்சினையை முடிவிற்கு கொண்டுவர ஆப்கானிஸ்தான் மற்றும் தலிபான்களிடையே கடந்த பெப்ரவரி மாதம் அமைதி ஒப்பந்தத்தின்படி 100 தலிபான் கைதிகளை ஆப்கானிஸ்தான் அரசு விடுதலை செய்து வருகிறது. இருந்தாலும் தாக்குதல் சம்பவங்கள் குறைந்ததாக இல்லை. சில மாகாணங்களில் பயங்கரவாத சம்பவங்கள் நடந்து கொண்டு வருகின்றது.

ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் 100 தலிபான் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இரண்டு நாட்களின் பின்னர் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

மேற்படி தாக்குதலில் 14 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், சில தலிபான்களும் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் மகப்பேற்று மருத்துவமனையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 10இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.