ஆசியக் கண்டத்தில் அதிகரிக்கும் படைத்துறை செலவீடுகள்

இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து படைத்துறை செலவீனங்களை அதிகரித்து வருவதாக  ஸ்ரேக்கோம் அனைத்துலக அமைதி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் படைத்துறை செலவீடு 2019 ஆம் ஆண்டு 261 பில்லியன் டொலர்களாகவும், இந்தியாவின் செலவீடு 71 பில்லியன் டொலர்களாகவும் அதிகரித்துள்ளது. உலகின் மொத்த பாதுகாப்பு செலவீனம் 1.9 றில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

எனினும் அமெரிக்காவே உலகின் முன்னனி படைத்துறை செலவீடுகளைக் கொண்ட நாடாக உள்ளது. மொத்த செலவீனத்தில் அது 38 விகிதத்தை கொண்டுள்ளது. அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஸ்யா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அதிக பாதுகாப்புச் செலவீனங்களை கொண்ட நாடுகள்.

இதனிடையே, ஆசியக் கண்டத்தில் 2.7 பில்லியன் மக்கள் தொகையை கொண்ட சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மேற்கொண்டுவரும் அதிக படைத்துறை செலவீனங்கள் அங்கு ஒரு பதற்றத்தை அல்லது பனிப்போர் சூழ்நிலையை ஏற்படுத்தலாம் என கருதப்படுகின்றது.