அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயன்ற 2000 பேர் உயிரிழப்பு

கடந்த 2009 முதல் 2013ம் ஆண்டு வரை இலங்கையிலிருந்து சுமார் 4,500 தஞ்சக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருக்கிறார்கள்.
அதே சமயம் கடந்த 20 ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயன்ற சுமார் 2000 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
கடந்த 2013ம் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அரசு, கடல் வழியாக வருபவர்கள் ஒருபோதும் குடியமர்த்த மாட்டோம் என எச்சரித்து வருகின்றது.
இந்நிலையில், அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சு தடுப்புமுகாம்களிலிருந்த கிட்டத்தட்ட 10 ஆயிரம் புகலிடக்கோரிக்கையாளர்களின் விவரங்களை தவறுதலாக இணையத்தில் வெளியிட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கவேண்டும் என அந்நாட்டு நீதி மன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களிலுள்ளவர்கள் தொடர்பான அறிக்கையை தனது இணையத்தில் வெளியிட்ட உள்துறை அமைச்சு, தவறுதலாக தடுப்பு முகாம்களிலுள்ள சுமார் 9,258 பேரின் முழுப்பெயர், பிறந்ததிகதி, இடம், சொந்தநாடு, படகுப்பயண விபரம் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply