அறிவியல் அதிசயம்: 24,000 ஆண்டுகள் பிறகு உயிர்த்தெழுந்த உயிரினம்

சைபீரியாவில் 24 ஆயிரம்ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த ஒரு நுண்ணிய பல செல் உயிரினம் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது என புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.

ரஷ்யாவின் ஆர்டிக் பகுதியில் உள்ள அலீஸா ஆற்றில் இருந்து டெலாய்டு ரோட்டிஃபர் (Bdelloid Rotifer) என்கிற உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டெடுத்தனர்.

கிரிட்டோபயோசிஸ் என்கிற உறைந்த நிலையில் பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின், இப்போது உருகிய பிறகு, எந்த வித பாலியல் ரீதியிலான உறவுகளுமின்றி, அந்த உயிரினத்தால் இனப்பெருக்கம் செய்து கொள்ள முடிந்தது.

இதற்கு முந்தைய ஆராய்ச்சியில் அந்த உயிரினம் 10 ஆண்டுகள் வரை உறைந்த நிலையில் உயிர் வாழ முடியும் என கூறப்பட்டிருந்தது.

நன்றி – பிபிசி