அயோத்தியில் அமையவுள்ள இராமர் கோவிலுக்கு இந்தியாவிலேயே மிகப் பெரிய எடை கொண்ட 2,100 கிலோ எடை கொண்ட மணி உருவாக்கப்பட்டுள்ளது. இதை அந்த மாநிலத்தின் ஹிந்து, முஸ்லிம் கலைஞர்களின் ஒன்று சேர்ந்த ஆக்கத்தினால் இது உருவாக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் அயோத்தியில் கடந்த 5ஆம் திகதி ராமர் கோவில் கட்டுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியிருந்தார்.
இந்த மணி தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம், ஈயம், தகரம், இரும்பு, மற்றும் பாதரசம் ஆகிய எட்டு உலோகங்களின் கலவையால் செய்யப்பட்டது. ராமர் கோயில் கட்டுவதற்கான வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் நிர்மோஹி அகாராவே இந்த மணியை அமைப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். இந்த மணி செய்வதற்கு 21 இலட்ச ரூபாய்கள் செலவாகியுள்ளதாக மணி தயாரித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மணி உருவாக்குவதற்கு நான்கு மாத காலங்கள் தேவைப்பட்டது. இந்த மணியை அமைப்பதற்கு இந்துக்கள், முஸ்லிம்கள் உட்பட 25 தொழிலாளர்கள் பணிபுரிந்துள்ளனர்.