அமைச்சராகின்றார் சமந்தா பவர்

225 Views

சிறீலங்காவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தீர்மனத்தை கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகித்த சமந்தா பவருக்கு தற்போது ஜோ பைடனின் அரசில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அவர் அமெரிக்காவுக்கான ஐ.நா பிரதிநிதியாக பதவி வகித்திருந்தார். தற்போது அவர் அமெரிக்காவின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

மனிதாபிமானத்துறையில் பவர் மிகவும் அரிய பணிகளை ஆற்றியுள்ளார். ஐ.நாவுக்கான தூதுவராக பணியாற்றியபோது மனிதாபிமானம் மற்றும் துணிச்சாலான நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவின் மதிப்பை உயர்த்தியவர் என பவரின் நியமனம் தொடர்பில் கருத்து தெரிவித்தபோது பைடன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு சபையில் அங்கம் வகித்தபோது, மனித உரிமைகளுக்கு பவர் முன்னுரிமை வழங்கியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply