அமேசான் நிறுவனத்திற்கெதிராக போராட்டம்;கருப்பு வெள்ளிக்கு தடைவரலாம்

அமேசான் ‘கருப்பு வெள்ளி’ விற்பனைக்கு எதிராக பிரான்ஸ் நாட்டில் செயற்பாட்டாளர்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.

இந்த கருப்பு வெள்ளி விற்பனையானது நுகர்வு கலாசாரத்தை ஊக்குவிக்கிறது என்றும், இது சூழலியலில் பெரும் தாக்கத்தை உண்டாக்குகிறது என்றும், இதன் காரணமாகவே தாங்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

வடக்கு பாரீஸில் உள்ள அமேசான் தலைமை அலுவலகத்தில் கூடி இந்தப் போராடத்தை நடத்தினர்.

இதேவேளை பிரான்ஸ் சட்டவல்லுனர்கள் இந்த கருப்பு வெள்ளி விற்பனையை பிரான்சில் தடைசெய்வது பற்றி தாம் ஆராய்ந்து வருவதாக தெரிவித்தனர்.