அமெரிக்க நாடாளுமன்ற பகுதியில் துப்பாக்கிச் சூடு – காவல்துறை அதிகாரி உயிரிழப்பு

அமெரிக்க நாடாளுமன்றம் இருக்கும் கேபிடல் கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒரு  காவல்துறை அதிகாரி உயிரிழந்துள்ளதாகவும்  மேலும் ஒருவர்  காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின்  வாஷிங்டன் நகரில்  இருக்கும் இந்தக் கட்டடத்தின் பாதுகாப்பு தடுப்புகளை மோதிக்கொண்டு ஒரு கார் உள்ளே சென்றதாகவும் பின் அதில் இருந்த ஓட்டுநர்  இந்த துப்பாக்கிச் சூடை நடத்தியதாகவும் தெரிய வருகின்றது.

இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

டிரம்ப் ஆதரவு கும்பல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் செய்த வன்முறை:  புகைப்படங்கள் - BBC News தமிழ்

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து சான்றளிக்கும் பணியில், நாடாளுமன்றம் ஈடுபட்டிருந்தபோது   இந்த கட்டடத்துக்குள் புகுந்து டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த தாக்குதல் பயங்கரவாதம் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.